districts

img

கரும்பு விவசாயிகளின் பெயரில் மோசடியாக பெற்ற கடனை திருஆருரான் சர்க்கரை ஆலை பெயரில் மாற்றுக!

 கும்பகோணம், பிப்.5- தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள திரு மண்டங்குடி திருஆரூரான் சர்க் கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளிடம் பெறப்பட்ட கரும்புக்கு பாக்கி முழுவதுமாக வட்டியுடன் வழங்கிட வேண்டும், திருஆருரான் ஆலை, 2,386 விவ சாயிகளின் பெயரில் வங்கிகளில் சுமார் ரூ.200 கோடி கடனைப் மோச டியாக பெற்று எடுத்துக் கொண்டது. அந்த விவசாயிகள் பெயரில் உள்ள  கடன் தொகையை ஆலை நிர்வா கம் பெயரில் மாற்றிட வேண்டும். விவசாயிகளின் பெயரில் வங்கி கள் கடனில்லா சான்று வழங்க  வேண்டும், கரும்பு விவசாயிகள் கரும்பு கிரைய பணத்தில் பிடித்தம் செய்து கொண்டு நான்கு ஆண்டு களாக சுமார் 50 கோடி வங்கி களுக்கு செலுத்தாமல் மோசடி செய்துள்ளது என பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருமண்டங்குடியில் சர்க்கரை ஆலை முன்பு 68 நாட்களாக தொட ர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலை மையில் கோட்டாட்சியர் அலுவல கத்தில் கரும்பு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இதில், கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில பொதுச் செய லாளர் ரவீந்திரன், தஞ்சை மாவட்டச் செயலாளர் கண்ணன், தலைவர் செந்தில்குமார், திரு மண்டங்குடி கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாக.முரு கேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு தரப்பில், பாபநாசம், கும்பகோணம் வட்டாட்சியர்கள் மற்றும் பாபநாசம் டிஎஸ்பி, ஆலை யை ஏலம் எடுத்துள்ள கால்ஸ் நிறு வன நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.

 இதில், விவசாயிகள் சங்கம் சார்  பில் 2019 அன்று தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்தில் மோசடி புகார் குறித்து தெரிவித்த போது, ஆலையின் உரிமையாளர் நிலுவைத் தொகை அனைத்தையும் செலுத்துவதாக ஒப்புக்கொண்ட கடித நகலையும் கரும்பு ஆலையிலிருந்து பெறப் படும் லாபத்தை பங்கிட்டு தர நீதி மன்றம் உத்தரவிட்ட தகவல்களை யும் கரும்பு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரன் தாக்  கல் செய்தார்.  அப்போது, கால்ஸ் நிறுவனம் கடனை ஏற்றுக் கொள்ள முடியாது  என தெரிவித்தது. இருந்தபோதி லும் இதில் முழுமையாக அரசு தலையிட்டு விவசாயிகளின் பெய ரில் மோசடியாக கடன் பெற்றதை சர்க்கரை ஆலை நிர்வாகம் பெய ரில் மாற்ற வேண்டும் விவசாயி களுக்கு கடன் இல்லாத சான்று  வழங்க வேண்டும். நிலுவையில்  உள்ள அனைத்து தொகையும் வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்  டும். நீதிமன்ற உத்தரவுப் படி லாப பங்கீட்டில் விவசாயிகளுக்கு பங்குத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.  இதனை தொடர்ந்து கோட்டாட்சியர் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிப்பதாக உறுதி அளித்தார் இருந்தபோதிலும் தொடர்ந்து ஆலையின் முன்பு காத்  திருப்புப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது. மேலும் பிப்ரவரி 17 அன்று சென்னை தலைமைச் செயலகம் முன்பு அனைத்து விவசாயிகளின் சார்பில் கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலி யுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெறும் என கூட்டத்திலேயே துண்டு பிரசுரங்கள் வழங்கப் பட்டது.