தஞ்சாவூர், மே 20- தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகா மருவூரில் செயல்பட்டு வரும், லாரிகளுக் கான மணல் குவாரியில் மாட்டு வண்டியிலும் மணல் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, திருவையாறு வட்டாட்சியர், மணல் மாட்டு வண்டித் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெய பால், முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொரு ளாளர் பழனி அய்யா, விவசாயத் தொழிலா ளர் சங்க ஒன்றியச் செயலாளர் பிரதீப் ராஜ் குமார், மாட்டு வண்டி சங்க நிர்வாகிகள் திரு விடைமருதூர் கோவிந்தராஜ், பூதலூர் இமானுவேல், திருவையாறு சுதாகர் என்ற அம்பலவாணன், செயலாளர் மாதவன், பொருளாளர் சரபோஜி ராஜன், ஊராட்சி மன்ற துணை தலைவரும், மாட்டு வண்டி தொழிலா ளர் சங்கத் துணைத் தலைவருமான சூரிய குமார், துணைச் செயலாளர் பிரபுதேவா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட திருவையாறு வட்டாட்சியர், மணல் மாட்டு வண்டிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து உரிய முடிவெடுக்கப்படும் என்றார். முன்னதாக, திருவையாறு தாலுகா மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கம் கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது.