districts

img

கழுமங்குடா ஐஸ்வாடி மீனவர் குடியிருப்புக்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் உறுதி சாலை மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

தஞ்சாவூர், மார்ச்.10- தஞ்சாவூர் மாவட்டம் மரக்காவலசை ஊராட்சி கழுமங்குடா (ஐஸ்வாடி) பகுதி யில் 20க்கும் மேற்பட்ட மீனவக் குடும் பங்கள், மின் இணைப்பு இல்லாமல் கடந்த பல வருடங்களாக குடியிருந்து வரு கின்றனர். இங்கு குடியிருந்து வருபவர்களின் குழந்தைகள் படிப்பதற்கு ஏதுவாக மின் இணைப்பு கேட்டு பல ஆண்டுகளாக, அரசின் பல்வேறு துறையினருக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய நட வடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மின் இணைப்பு இல்லாத தால் இப்பகுதியில் இரவு நேரங்களில் பாம்புகள் உள்ளிட்ட விசப் பூச்சிகளின் தொல்லை உள்ளதால் அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.  இந்நிலையில், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், இப்பகுதி பொதுமக்கள் மின் இணைப்பு கேட்டு, மார்ச் 11 (வெள்ளி யன்று) சகழுமங்குடா கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தப் படும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில், புதனன்று மாலை பேராவூரணி வட்டாட்சியர் அலுவல கத்தில், வட்டாட்சியர் த.சுகுமார் தலைமை யில் சமாதானப் பேச்சுவார்த்தை நடை பெற்றது.  சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் சக்திவேல், மின்வாரிய உதவிப் பொறியாளர் ஸ்ரீராம், சேதுபாவாசத்திரம் மீன்வளத் துறை மேற்பார்வையாளர் சுரேஷ், துணை வட்டாட்சியர் சுப்பிர மணியன், வருவாய் ஆய்வாளர் வெற்றிச் செல்வன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் அரசுத் தரப்பில் கலந்து கொண்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா ளர் ஆர்.எம்.வீரப்பெருமாள், விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப் பையா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.வேலுச்சாமி, வி.நாகேந்திரன், பி.பெரியண்ணன், பி.சேகர், மல்லிப் பட்டினம் கிளைச் செயலாளர் வி.சுப்பிர மணியன் மற்றும் மரக்காவலசை ஊராட்சி மன்ற உறுப்பினர் சரவணன், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதில், மார்ச் 18 தேதிக்குள் மரக்கா வலசை ஊராட்சி கழுமங்குடா ஐஸ்வாடி மீனவர் குடியிருப்புக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதிய ளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.