கும்பகோணம், ஜூலை 17 - கல்வி வியாபாரத் தீயில் வெந்து மடிந்த 94 குழந்தைகளின் நினைவு தினத்தன்று (ஜூலை 16) இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட மாநாடு கும்பகோணத்தில் நடை பெற்றது. கும்பகோணம் பாலக்கரையில் உள்ள குழந்தைகள் நினைவிடத்திலிருந்து நினைவுச் சுடர் பேரணியாக மாநாட்டு மேடைக்கு வந்தனர். மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் கே.அர்ஜுன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் அருள்ராஜ் வர வேற்றார். மாவட்ட குழு உறுப்பினர் பிரேம் குமார் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநாட்டை மாநில துணை செயலாளர் அர விந்தசாமி துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் பிரபாகரன் எதிர்கால கடமை கள் குறித்து பேசினார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் க.அருளரசன், மயிலாடுதுறை மாவட்ட செய லாளர் அமுல் காஸ்ட்ரோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலச் செயலா ளர் வி.மாரியப்பன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் அன்புமணி நன்றி கூறினார். மாநாட்டில் மாவட்டத் தலைவ ராக வே.அர்ஜுன், செயலாளராக சந்துரு மற்றும் 31 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் நீட், கியூட் தேர்வை ரத்து செய்திட வேண்டும். தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும். கல்வி வியாபாரத் தீயில் வெந்து மடிந்த 94 குழந்தைகளின் நினைவு தினத்தை கல்வி வியாபார கருப்பு தினமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.