districts

நெல்கொள்முதல் நிலையத்தில் தொடரும் முறைகேடு கட்டுப்படுத்த தஞ்சாவூர் விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூர், மார்ச் 24 -  நெல் கொள்முதல் நிலை யங்களில் தொடர்ந்து நிகழும் முறைகேடுகளைத் தடுத்து, விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது. தஞ்சாவூர் கோட்டாட் சியர் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட் டாட்சியர் (பொறுப்பு) கோ. பழனிவேல் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் பேசிய விவ சாயிகள், “ தஞ்சாவூர் மாவட் டத்தில் தற்போது சம்பா நெல் கொள்முதல் தீவிர மாக நடைபெற்று வருகிறது.  கொள்முதல் நிலையங்க ளில் மூட்டைக்கு ரூ.50 வரை முறைகேடாகக் கேட்டுப் பெறுகின்றனர். இந்தப் பணத்தைக் கொடுத்தால் தான் நெல் கொள்முதல் செய்கின்றனர்.  இல்லையென்றால் வாரக்கணக்கில் விவசாயிக ளை காக்க வைக்கின்றனர். அதே போல் 40 கிலோ மூட்டைக்கு மூன்று கிலோ வரை கூடுதலாக எடை வைத்து எடுக்கின்றனர்.  கள்ளச்சாரய விற்ப னையை தடுத்தது போல், கொள்முதல் நிலையத்தில் நடைபெறும் முறைகேடு களை தடுத்தால் தான் விவ சாயிகளைக் காப்பாற்ற முடியும், இல்லையென்றால் அடுத்தாண்டு முதல் மூட்டைக்கு ரூ.50 என்ற லஞ்சம் மேலும் மேலும் அதி கரிக்கும்.  கரும்பு உற்பத்தியா ளர்களுக்கு மாநில அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொ கையை உரிய காலத்தில் வழங்க உடனடியாக அர சானை வெளியிட வேண்டும். குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை யில் இம்மாதம் 31-ஆம் தேதி யோடு அரவை நிறுத்தப்படு வதாகக் கூறப்படுகிறது. அதை மேலும் ஒரு வார காலம் நீட்டித்து இன்னும் வெட்டப்படாமல் உள்ள கரும்புகள் அனைத்தும் வெட்டிய பின்னர் அர வையை நிறுத்த வேண்டும். பூதலூர், திருவையாறு பகுதியில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள வாய்க்கால்களைக் கண்ட றிந்து தூர் வார வேண்டும். காவிரி மற்றும் குட முறுட்டி ஆறுகளில் திருக் காட்டுப்பள்ளி, திருவை யாறு பேராரூட்சி நிர்வா கங்களால் கொட்டி எறிக்கப் படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.