தஞ்சாவூர்/திருவாரூர், ஏப்.27 - தூர்வாரும் பணிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், உழவன் செயலி மூலம் விவசாயிகள் புகார் அளித்தால் 48 மணி நேரத்தில் உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள பாளையப்பட்டி கிராமத் தில், பாலையா ஏரி வரத்து வாய்க்கால் ரூ.11 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தூர்வாரப் படுகிறது. இப்பணியை, செவ்வாய்க் கிழமை நேரில் பார்வையிட்ட கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறுகையில், தூர்வாரும் பணிகள் வெளிப்படை தன்மையாக நடப்பதற்காக, விவசாயி களை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளன. மே 31 ஆம் தேதிக்குள்ளாக அனைத்து பணிகளும் முடிந்து விடும். எந்தெந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு கள் உள்ளது என்பதை கண்டறிந்து, அப்பகுதியிலும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் விடுத் துள்ள கோரிக்கை அடிப்படையில் தான் திட்டமிட்டு பணிகள் துவங்கப் பட்டுள்ளன. ஆட்சியர் மற்றும் கண்கா ணிப்பு குழு அதிகாரிகள், சில இடங்க ளில் அதிகளவில் தூர்வாரும் பணியை செய்ய வேண்டும் என கோரியுள்ளனர். அதற்காக இருக்கும் நிதியில் அல்லது கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து பணி கள் செய்யப்படும். கடைமடை வரை தண்ணீர் செல்லும். 29 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு வாய்க்கால்கள் உள்ளன.
இந்தாண்டு 5 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு தூர்வாரப்படு கிறது. படிப்படியாக வரும் காலங்க ளில் அனைத்து பகுதிகளிலும் தூர்வாரப்படும். தண்ணீர் பாசனத்திற்கு முறையாக செல்லாத இடங்களிலும், தண்ணீர் தேங்கும் இடங்களில் முக்கியத் துவம் அளித்தும் பணிகள் நடந்து வரு கின்றன. தொடர்ந்து, தூர்வாரும் பணி களை ட்ரோன் மூலம் கண்காணிக்க ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தூர்வாரும் பணிகளில் குறை பாடுகள் இருந்தால், உழவன் செயலி மூலம், விவசாயிகள் புகார் அளித்தால் 48 மணி நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, மாவட்ட கண்காணிப்பு அலு வலர் மற்றும் அரசு முதன்மை செய லாளர் விஜயகுமார் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் டெல்டா மாவட்டங்க ளில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வா ரும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆட்சியர்கள் காணொ லிக் காட்சி வாயிலாக பேசினர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் கூத்தா நல்லூர் வட்டத்திற்குட்பட்ட ஓகை, பேரையூர் மற்றும் கர்ணாவூர் கிராமம், பனையனார் வடிகால் வாய்க்கால், அனுமன் கோட்டக வடிகால் வாய்க்கால், தெற்கு பனையனார் வடிகால் வாய்க்கால் ஆகியவை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடை பெற்று வருகின்றன. சித்தனங்குடி ஊராட்சி, கர்ணாவூர் கிராமத்திற்குட் பட்ட பனையனார் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் முன்னிலையில், தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.