தஞ்சாவூர், ஜூலை 28- பேராவூரணி அருகே கனமழை கார ணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. தொடர்மழையால் நெல்மணிகள் முளைக்கும் நிலை உள்ளதால் விவ சாயிகள் செய்வதறியாது திகைத்து வரு கின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பாலத்தளி, எழுத்தணிவயல், கட்டையங்காடு, ஒட்டங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கர் பரப்பள வில், கோடை நெல் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணறு மூலம் விவசாயப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு, தற்போது கதிர் விட்டு, நெல்மணி கள் முற்றி, அறுவடைக்குத் தயாராக இருந்தது. இந்நிலையில், பேராவூரணி, பட்டுக் கோட்டை பகுதியில் கடந்த சில தினங்க ளாக மாலை நேரம் தொடங்கி அதி காலை வரை, பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. கடந்த புத னன்று பட்டுக்கோட்டையில் 45 மி.மீ, பேராவூரணியில் 23.20 மி.மீ மழை பதி வாகியுள்ளது. இதேபோல், தொடர்ந்து ஒரு வார காலமாகப் பெய்து வரும் மழை யால், பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், பலத்த காற்று காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த கதிர் கள் மண்ணில் சாய்ந்து, வயலில் தேங்கி நிற்கும் மழைநீரில் நெல்மணிகள் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் நெல்மணிகள் முளைக்கும் நிலையில் உள்ளது. இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெற்பயிர்கள் திடீர் மழையால் நீரில் மூழ்கி வீணாகி உள்ளது. ஏக்க ருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில், தற்போது நெற்பயிர் கள் முழுவதுமாக பாதிப்பு ஏற்பட்டுள் ளது. மண்ணில் விழுந்த நெல்மணிகள் முளைக்கத் தொடங்கி விட்டது. விவசா யத்திற்காக வாங்கிய கடனை எப்படி செலுத்துவது என்ற கவலை ஏற்பட்டுள் ளது. எனவே, வேளாண் துறை அதி காரிகள் பாதிக்கப்பட்ட இடத்தில் நெற் பயிர்களை பார்வையிட்டு, விவசாயி களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண் டும்’’ என்றனர்.
30 ஆயிரம் ஏக்கர் பாதிப்பு
திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள 90க்கும் அதிகமான கிராமங்க ளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட் டுள்ளது. இதனையொட்டி கடந்த மார்ச் மாதம் நடவு பணிகள் நடைபெற்றன. நாற்று நடவு செய்யப்பட்டு 120 நாட்கள் ஆன நிலையில் அறுவடை பணி கள் தொடங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத மத்தியில் விவசாயிகள் அறுவடை செய் யும் நெல்லை வாங்குவதற்காக அரசு சார்பில் 45 மையங்களில் நேரடி கொள் முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. இதனால் ஆர்வமுடன் நெற்கதிர் கள் மற்றும் நெல் இயந்திரம் மூலம் அறு வடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில நாட்களாக மழை பெய்து வருவதால், அறுவடைக்கு தயா ராக உள்ள 30 ஆயிரம் ஏக்கர் பரப்பள வில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் பாதிக் கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.