districts

தமிழகத்தில் நிகழாண்டு 150 இடங்களில் நிரந்தரமாக நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டப்படும்: அமைச்சர் தகவல்

தஞ்சாவூர், ஜூலை 15 -  தஞ்சாவூரில் வியாழக்கிழமை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கர பாணி, தஞ்சாவூர் கூட்டுறவு காலனி யில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கை  ஆய்வு செய்தார். பின்னர், முதுநிலை  மண்டல மேலாளர் அலுவலகத்தில், தமிழகத்தில் உள்ள நவீன அரிசி  ஆலை பொறியாளர்கள், பணியாளர் களுடன் கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.  கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர்  அர.சக்கரபாணி செய்தியாளர்களி டம் கூறியதாவது: “காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கொள்முதல் தொ டர்பாக ஆய்வு கூட்டங்கள் நடத்தப் பட்டு, விவசாயிகளிடம் ஆலோசனை கள் பெறப்பட்டுள்ளன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தமிழகத்தில் 21 இடங்களில் நவீன அரிசி ஆலைகள் இயங்கி வரு கின்றன. பொதுமக்களுக்கு தரமான அரிசியை வழங்க வேண்டும் என்ப தால், நவீன அரிசி ஆலைகளில் பணி யாற்றும் பொறியாளர்கள், பணியா ளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட் டது. இதில் 12 ஆலைகளில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் பழு தாகியுள்ளது என கூறினர். உடன டியாக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.7 கோடி நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது.  இதே போல் தாழையூத்து, மதுரை, மானாமதுரையில் உள்ள அரிசி ஆலைகளிலும் சீரமைப்பு பணி கள் நடைபெறவுள்ளன. நாளொன் றுக்கு 100 மெட்ரிக் டன் அளவுக்கு அரிசி அரவை செய்ய, மூன்று ஷிப்டு களாக பணியாளர்கள் பணியாற்ற உள்ளனர். ஒரு சில இடங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்ப  நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.  பணியாளர்கள் பல்வேறு கருத்து களைக் கூறியுள்ளனர். இதுதொட ்பாக உரிய நடவடிக்கைகள் நிர்வாக அளவில் எடுக்கப்படும். கருப்பு, பழுப்பு நிற அரிசிகளை நீக்கும் வகையில் இதுவரை 17  அரிசி ஆலைகளில் நவீன இயந்தி ரம் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 ஆலைகளிலும் நிகழாண்டு பொருத்தப்படும். மேலும், தமிழகத்தில் இதுவரை  376 தனியார் அரவை முகவர்கள்  நெல் அரைத்து அரசுக்கு வழங்கு கின்றனர். தற்போது 638 முகவர் களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், நிரந்தர நெல் கொள் முதல் நிலையங்கள் 50 இடங்களி லும், நபார்டு மூலம் 100 இடங்களி லும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படு கிறது. கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் ஏதும் நடைபெற் றால், விவசாயிகள் உடனடியாக அங்கு வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியிலோ அல்லது அங்குள்ள தொலைபேசி எண்களிலோ புகார் தெரிவிக்கலாம். கொள்முதல் நிலை யங்களில் லாரி மாமூல் தொ டர்பாக நீதிமன்ற வழக்கு இருப்ப தால், இதுகுறித்து நீதிமன்ற அறிவு ரையின்படி நடவடிக்கை எடுக்கப் படும்.”  இவ்வாறு அமைச்சர் கூறினார். அப்போது தஞ்சாவூர் எம்எல்ஏ டிகேஜி.நீலமேகம், மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், முதுநிலை மண்டல மேலாளர் நா. உமாமகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரி கள் கலந்து கொண்டனர்.