districts

img

தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தஞ்சாவூர், பிப்.7- ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் மாற்றுத் திற னாளிகள் துறைக்குச் சென்றாண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட ரூ.90  கோடி குறைத்து ஒதுக்கியதைக் கண்  டித்தும், 100-நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,300 கோடி குறைத்துள்ளதைக் கண்டித் தும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பட்டுக்கோட்டையில் ஆர்ப்  பாட்டம் நடைபெற்றது. மாவட்டத்  தலைவர் டி.கஸ்தூரி, துணைத்தலை வர் ஏ.மேனகா, மாவட்டத் துணைச் செயலாளர் சி.ஏ.சந்திரபிரகாஷ், மணி கண்டன், வினோத் குமார், ராஜேஷ் குமார் பாலசுப்பிரமணியன், செந்தில்  குமார், செபாஸ்டின், ஜோதி, கமலா,  சித்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தஞ்சாவூரில் மாவட்டத் துணைத் தலைவர் வி.ரவி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன், மாவட்டத் துணைச் செயலாளர் சாமி யப்பன், சங்கிலி முத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.