கும்பகோணம் டிச 24 கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி யில் (தன்னாட்சி) ஏப்ரல் 2020-ஆம் கல்வி யாண்டில் படிப்பினை நிறைவு செய்த இள நிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறை ஞர் மாணவர்களுக்கு சனிக்கிழமை கல்லூரி யின் அண்ணா கலையரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவை, கல்லூரி முதல்வர்(பொ) மா. மீனாட்சிசுந்தரம் தொடங்கிவைத்து, வர வேற்றார். நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.சுகுமார் சிறப்பு விருந்தி னராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். பட்டமேற்பு விழாவில், இளநிலைப் பாடப்பிரிவில் 974 மாணாக்கர்களும், முது நிலைப் பாடப்பிரிவில் 374 மாணாக்கர்களும், ஆய்வியல் நிறைஞர் மாணாக்கர்கள் 95 பேரும் என மொத்தம் 1443 மாணவ மாணவி யர்கள் பட்டம் பெற்றனர். மேலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத் தரவரிசைத் தேர்வில் முதுஅறிவியல் இயற்பியல் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி முகில்தாரணிக்குப் பதக்கமும், தர வரிசைத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணாக் கர்கள் இளநிலையில் 13 பேருக்கும், முது நிலையில் 13 பேருக்கும், துணைவேந்தர் பதக்கம் வழங்கினார்.