districts

தஞ்சை பெரியகோவிலுக்கு வருபவர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தல்

தஞ்சாவூர், மே 10 - தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு வரும் சுற்று லாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் செயல்பாட்டில் இருக்க  வேண்டும் என தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பி னர் ச.சு.பழநிமாணிக்கம்  உத்தரவிட்டார். தஞ்சாவூர் பெரியகோவிலில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மேற்கொள் ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து,  தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சு.பழநி  மாணிக்கம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  பின்னர், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பி னர் பேசுகையில், “உலகப் புகழ் பெற்ற தஞ்சை  பெரியகோவிலுக்கு தினந்தோறும் ஆயிரத்துக் கும் மேற்பட்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் வருகை புரிகின்றனர். இங்கு வருபவர்க ளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை கள், சிற்றுண்டி, வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட் டவைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பரா மரிக்க வேண்டும்.   சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த வகையி லும் பாதிப்பும் நடக்காத வண்ணம், காவல்துறை யினர் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும்,  பெரிய கோவிலைச் சுற்றியுள்ள இடங்கள்  அனைத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பெரியகோவில் உள்ளேயும், வெளி யேயும் தடுப்பரண் அமைத்து ஒழுங்குபடுத்த வேண்டும்” என அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.