தஞ்சாவூர், ஆக.16 - நூறு நாள் வேலையை 200 நாட்களாக வும், கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். வீடு இல்லாத அனை வருக்கும் பட்டாவுடன், ரூ.10 லட்சத்தில் வீடு கட்டித் தர வேண்டும். நிலச் சீர்திருத்த சட்டத்தை கடுமையாக்கி, உபரி நிலங்களை விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து பேரூராட்சி பகுதி களிலும் நூறு நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கேரளா போல் விவ சாயத் தொழிலாளர்களுக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும். 55 வயது கடந்த அனை வருக்கும் ரூ.5,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். கல்வி, சுகாதாரத்தை தனி யார் மயமாக்கக் கூடாது. புதிய தொழிலா ளர் சட்டத் தொகுப்பையும், மின்சார மசோ தாவையும் திரும்பப் பெற வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டப் பணியா ளர்களை, சட்டவிரோதமாக காலை 7 மணிக்கே வேலைக்கு வரச் சொல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். தூய்மைக் காவ லர்களுக்கு மாதம் ரூ.21,000 குறைந்தபட்சம் ஊதியமாக வழங்க வேண்டும் என வலி யுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், சிஐடியு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க் கிழமை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் கள் ஆர்.வாசு (விவசாயத் தொழிலாளர் சங்கம்), பி.செந்தில்குமார் (தமிழ்நாடு விவசா யிகள் சங்கம்), து.கோவிந்தராஜூ (சிஐடியு) ஆகியோர் தலைமை வகித்தனர். வி.தொ.ச மாநிலக்குழு உறுப்பினர் சி.நாகராஜன், மாவட்டப் பொருளாளர் கே.அபிமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநி லச் செயலாளரும், கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினருமான எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர்கள் கே.பக்கிரிசாமி (விவசாயத் தொழிலாளர் சங்கம்), என்.வி. கண்ணன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்), சி.ஜெயபால் (சிஐடியு) ஆகியோர் கோரிக் கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரைச் சந்தித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.