தஞ்சாவூர், ஜன.28- தமிழ்நாடு அரசு, செந்தமிழ்ச் சொற்பிறப் பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழி யாக, ஆங்கிலச் சொற்களுக்கு இணையான புதிய தமிழ்க் கலைச்சொல் அகராதி உரு வாக்கி வெளியிட, அகரமுதலி இயக்கம் ஒன்றை துவங்கியுள்ளது. இதில், தமிழ்நாடு பாடநூல் (ம) கல்வியி யல் பணிகள் கழகத்துடன் இணைந்து, துறை சார் வல்லுநர்களைக் கொண்ட குழுக்களை அமைத்து, ஆண்டுக்கொரு துறையைத் தேர்வு செய்து கலைச்சொல் அகராதிகளை உருவாக்கி வெளியிடவுள்ளது. இதன்படி நடப்பாண்டில் முதற்கட்டமாக மருத்துவக் கலைச்சொல் அகராதி உரு வாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இந்த அகராதிக்காகத் தொகுக்கப்பட்ட சொற் களைச் சீராய்வு செய்வது தொடர்பான கூட்டம், தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை அகர முதலி இயக்கக இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் தலைமையில் நடைபெற்றது. மூத்த மருத்துவர் சு.நரேந்திரன் முன்னிலை வகித்தார். மருத்துவர்கள் இரா.இளங் கோவன், இரா.முத்துக்குமரன், இத்திட்டத் தின் சொல் திரட்டுனர் முனைவர் மு.கண்ணன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அகராதி யியல் துறைத்தலைவர் முனைவர் உல. பால சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண் டனர். இதில், மருத்துவக் கலைச்சொல் அகராதி உருவாக்கத்திற்குத் தேவையான நூல்களை மருத்துவ வல்லுநர்களும், தமிழ்ப் பல்கலைக் கழகத்தினரும் வழங்கினர். கூட்டத்தில், அகரமுதலி இயக்ககப் பதிப்பாசிரியர் தமிழ்மணி உடனிருந்தார். இதுகுறித்து விசயராகவன் கூறுகை யில், ‘‘முதற்கட்டமாகத் தொகுக்கப்பட்ட 13, 752 சொற்களில், 2,321 கலைச்சொற்களைச் சீராய்வு செய்து, கருத்துரைகள் வழங்கப் பட்டுள்ளன. மேலும், சில கலைச்சொற் களை சீராய்வு செய்து இந்தாண்டு அக்டோ பர் மாதம் புத்தகமாக வெளியிட திட்டமிட்டுள் ளோம்’’ என தெரிவித்தார்.