தஞ்சாவூர், ஆக.31 - தஞ்சாவூர் மாவட்டத்தில் எதிர்வரும் கே.எம்.எஸ், 2022 - 2023 காரீப் சந்தை பருவத் தில், குறுவைப் பட்டம் நெல் அறுவடையை முன்னிட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செப்.1 ( வியாழக்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன. பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் அரசால் நெல்லுக்கான கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. சன்ன ரகம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை கிலோ ஒன்றுக்கு ரூ.2,060, மாநில அரசின் ஊக்கத்தொகை ரூ.100 என மொத்தம் ரூ.2,160 வழங்கப்படுகிறது. அதே போல் பொது ரகத்திற்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,040, மாநில அரசின் ஊக்கத்தொகை ரூ.75 என மொத்தம் ரூ.2,115 வழங்கப்பட உள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் நெல் லினை அருகில் உள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடையலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்துள்ளார்.