tamilnadu

சிபிஎம் முயற்சியால் வாளூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

குடவாசல், ஜூலை 9- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்ட த்தில் உள்ள வாளூர் கிராமத்தில் நுகர்பொ ருள் வாணிப கழகத்தின் நேரடி கொள்முதல் நிலையம் சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஜெ. முகமது உதுமான் முயற்சியால், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. நன்னிலம் வட்டம் வாளூர் கிராம மக்கள் தங்களின் ஊரில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலை யம் திறக்கப்படாமல் உள்ளது. நேரடி நெல்  கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவ சாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கோரி க்கையாகும். வாளூர் பகுதி மக்களை சந்திக்க  வந்த சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது  உதுமானிடம் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி அந்த பகுதி மக்கள் கூறி னார்.

இதனையடுத்து நன்னிலம் ஒன்றியச் செயலாளர் டி.வீரபாண்டியன், மாவட்ட கவு ன்சிலர் ஜெ.முகமது உதுமான், விதொச செய லாளர் கே.எம்.லிங்கம் ஆகியோர் மாவட்ட  ஆட்சியரை நேரில் சந்தித்து குறுவை சாகு படி செய்த நெல்லை விற்பனை செய்ய, வாளூர் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க கோரினார். கோரி க்கையினை ஏற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சி யர் நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்திட  உத்தரவிட்டார். நேரடி கொள்முதல் நிலையம் செயல்பா ட்டுக்கு வந்த நிலையில், அங்குள்ள மக்கள்  உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றி செயல்பாட்டுக்கு கொண்டு வந்த மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் டி  வீரபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் ஜெ. முகமது உதுமான், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் மற்றும் நிர்வாகிகளுக்கு கிராம மக்கள்  நன்றி தெரிவித்தனர்.