தஞ்சாவூர், ஏப்.12 - பேராவூரணியில் இரு வழிச்சாலை பணிகள் நிறை வடையும் நிலையில், தன்னு டைய கோரிக்கையை ஏற்று, இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து தந்த முன்னாள் முதல மைச்சர் எடப்பாடி பழனி சாமி, பரிந்துரைத்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்தி லிங்கம் ஆகியோருக்கு, பேராவூரணி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மா. கோவிந்தராசு நன்றி தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தஞ்சாவூர் மாவட் டம், பேராவூரணி நகரில், சாலையின் இருபுறமும், மழைநீர் வடிகால் வாய்க்கால், சாலை நடுவே தடுப்புச் சுவர் அமைப்புடன், இருவழிச்சாலை ரூ.16 கோடி மதிப்பீட்டில் வழங்கிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதனை பரிந்துரை செய்து பெற்றுத் தந்த, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் ஆகி யோருக்கு எனது சார்பிலும், தொகுதி மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள் கிறேன். கடந்த 2020 ஆம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில், அப்போதைய சட்டமன்ற உறுப்பினரான எனது கோரிக்கையை ஏற்று, பேராவூரணி நகரின் வளர்ச்சிக்காக நிதி அறி விக்கப்பட்டு, 2021 ஏப்.16 ஆம் தேதி அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போது பணிகள் நிறை வடையும் நிலையில் உள்ளது. மேலும், எனது வேண்டு கோளை ஏற்று, தென்னங் குடி, களத்தூர் வழி பேரா வூரணி - திருச்சிற்றம்பலம் சாலை, செருபாலக்காடு, கரிசவயல் வழி, ஒட்டங்காடு - ரெண்டாம்புளிக்காடு சாலை, வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு- நெய் வேலி சாலை, கொண்டிக் குளம்-ஆவணம் சாலை உள்ளிட்ட சாலை விரிவாக் கப் பணிகள், புதிய தார்ச்சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் முடிவ டைந்துள்ளன. பேராவூரணி நகரை பொலிவுறு நகரமாக்க வர லாற்று சிறப்புமிக்க திட்டத்தை தந்து, நகரில் மழைநீர் தேங்காமல், முதன்மைச் சாலை, பட்டுக் கோட்டை சாலை, ஆவணம் சாலை, இருபுறமும் வடி கால், சாலை நடுவே தடுப்புச் சுவர் அமைத்தும், சேதுசாலையை அகலப் படுத்தியும் தந்து நகரை பொலிவுறச் செய்த முன்னாள் அதிமுக அரசுக்கு நன்றி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.