தஞ்சாவூர், அக்.8 - வழுதலை வட்டம் கிரா மத்தில் மயானக் கரைக்கு செல்லும் மண் சாலையை, தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா வாட்டாத்திக்கோட்டை கொல் லைக்காடு ஊராட்சிக்குட் பட்ட, வழுதலை வட்டம் கிராமத்தில் மயானக் கரைக்கு செல்லும் சாலை மண் சாலையாக இருப்ப தால், மழைக்காலங்களில் சடலத்தை எடுத்து செல்வ தில், இப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை அனு பவித்து வருகின்றனர். சடலங்களை சுமந்து செல்வோர் சேறும், சகதியு மாக உள்ள களிமண் சாலை யில் வழுக்கி விழுந்து, சட லங்கள் சாலையில் தவறி விழும் அவலம் ஏற்படுகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு என பல இடங்களுக்கும், தார்ச்சாலை அமைத்து தரக்கோரி மனு அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனையோடு தெரிவித்த னர். இந்நிலையில் இப்பகுதி பொதுமக்கள் சார்பில், சமூக ஆர்வலர் ப.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இப்பகுதி யில் 80-க்கும் மேற்பட்ட குடும் பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் வசித்து வருகிறோம். இரண்டு கி.மீட்டர் தூரம் உள்ள இந்த மயானச் சாலை செப்பனிடப்படாமல், சேரும் சகதியுமாக களிமண் சாலை யாக உள்ளது. மழைக்காலங் களில் சடலங்களை எடுத்துச் செல்ல முடியாத வகை யில், சடலங்களை சுமந்து செல்வோரின் கால் மண்ணில் புதைந்து விடு கிறது. சில நேரங்களில் கால் இடறுவதால், சடலம் கீழே விழும் அவலம் உள்ளது. கடந்த 70, 80 ஆண்டுக ளாகவே இந்த சாலை இப்படியே உள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பின ரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படா மல் உள்ளது. அதிகாரிகள் இந்த சாலையை ஆய்வு செய்து மதிப்பீடு தயாரித்து அனுப்பியும், இன்னும் சாலை அமைக்கப்படாமல் உள்ளது” என்றார். எனவே மாவட்ட ஆட்சி யர் மற்றும் அதிகாரிகள் இந்த இடத்தை ஆய்வு செய்து சாலை அமைத்து தர வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை யாக உள்ளது.