தஞ்சாவூர், மார்ச் 21- தமிழக அரசின் நிதிநிலை அறிக் கையில் அரசு ஊழியர்கள், ஆசி ரியர்களுக்கான எந்த கோரிக்கை யும் இடம் பெறாததைக் கண்டித்து வணிகவரித் துறை, கூட்டுறவுத் துறை, தொழிற்பயிற்சி நிலையம், கால்நடைத் துறை, தஞ்சாவூர் பன கல் கட்டிடம், பொதுப்பணித்துறை, வேளாண்மை இணை இயக்குநர், புள்ளியியல் துறை, நெடுஞ்சாலை துறை, மாவட்ட ஆட்சியர் அலு வலகம், மருத்துவக்கல்லூரி மருத் துவமனை, ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை உள்ளிட்ட தஞ்சா வூர் மாவட்டத்தில் 40 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட துணைத் தலைவர் தமிழ்வாணன், வடக்கு வட்டச் செயலாளர் அஜய்ராஜா, வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட னர். ஆவணத்தில் உள்ள பேராவூ ரணி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பேராவூரணி வட்டக் கிளை யின் சார்பில் நடைபெற்ற ஆர்பாட் டத்தில் மாவட்ட இணைச் செயலா ளர் ஸ்ரீ.மகேஷ் தலைமை வகித் தார். பேராவூரணி வட்டச் செயலா ளர் சிவகுருநாதன், பி.கலிய பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.