கும்பகோணம், மே 10 - தமிழ்நாடு மத்திய பல்க லைக்கழகத்தில் பேரிடர் கால மேலாண்மை குறித்து படிப்பு விரைவில் அறிமுகப் படுத்தப்படும் என பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள் ளார். கும்பகோணம் தனி யார் கல்லூரி விழாவிற்கு வந்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக (திருவா ரூர்) துணைவேந்தர் செய்தி யாளர்களிடம் தெரிவித்த தாவது: தமிழகத்திலேயே ஒரே மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர் ஊரில் அமைந் துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப் பல்கலைக்கழகம் 27 துறை களுடன் 64 படிப்புகளுடன் கல்விப் பணியாற்றி வரு கிறது. நாடு முழுவதும் கடந்த 2009 ஆம் ஆண்டு மத்திய பல்கலைக்கழக எண்ணிக்கை 38 ஆக இருந்தது. தற்போது 48 ஆக உயர்ந்துள்ளது. தற் போது இப்பல்கலைக்கழகத் தில் காஷ்மீர் முதல் கன்னி யாகுமரி வரையிலான பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2,700 மாணவ-மாணவி யர்கள் கல்வி பயின்று வரு கின்றனர். ஆனால் தமிழக மாண வர்கள் எண்ணிக்கை 700 ஆக உள்ளது (சுமார் 25%) அனைத்து பாட பிரிவுகளுக் கும் பொது நுழைவுத் தேர்வு உண்டு. நடப்பாண்டு முதல் இத்தேர்வினை தமி ழிலும் எழுத அனுமதி கிடைத் துள்ளதால் தமிழக மாண வர்கள் கூடுதலாக இவ்வாண்டு சேர்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான படிப்புகளுக்கு மத்திய பல் கலைக்கழகம் முன்னுரிமை அளிக்கும். ஒரு லட்சம் அயல் நாட்டு பறவைகள் வரும் கோடியக்கரை அருகே அமைந்துள்ளதால் விரை வில் பல்கலைக்கழகத்தில் பறவைகள் குறித்த ஆராய்ச்சி படிப்பும், நாகை கடற்கரை பகுதி அருகே அமைந்துள்ளதால் பேரிடர் கால மேலாண்மை குறித்த படிப்பும் விரைவில் அறி முகப்படுத்தப்படும். இவ்வாறு துணை வேந்தர் தெரிவித்தார்.