பட்டுக்கோட்டை, ஜன.6- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ரயில் நிலை யத்தில் சரக்கு போக்குவ ரத்து முனையம் இயக்க ரயில்வே நிர்வாகம் ஒப்பு தல் அளித்துள்ளது திருவாரூர் - பட்டுக் கோட்டை - காரைக்குடி தடத் தில் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் 2012 ஆம் ஆண்டு துவங்கி 2019 ஆம் ஆண்டு நிறைவடைந்து பயணிகள் ரயில்கள் இயங் கத் துவங்கின. ரயில் நிலை யம் மற்றும் சரக்கு போக்கு வரத்து முனையம் அமைக்க அப்பகுதியில் உள்ள நில உடமையாளர்களிடம் இருந்து நிலங்கள் கையகப் படுத்தப்பட்டன. டெல்டா பகுதியில் விளையும் நெல்லை, வெளி மாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மூலமாக அனுப்பி வைக்க தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மற்றும் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் சரக்கு போக்கு வரத்து முனையத்தை விரைந்து துவக்க, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர், முதுநிலை கோட்ட இயக்கக மேலாளர் மற்றும் முதுநிலை கோட்ட வணிகவியல் மேலாளர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகளை ஏற்ற ரயில்வே நிர்வாகம், பட்டுக் கோட்டை ரயில் நிலைய சரக்கு முனையத்தை திறப்ப தற்கு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. பட்டுக்கோட்டையில் சரக்கு போக்குவரத்து முனையம் துவங்க ஒப்புதல் வழங்கிய திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால், முதுநிலை கோட்ட இயக்கக மேலா ளர் ஹரிகுமார், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் செந்தில்குமார் ஆகியோ ருக்கு பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத் தினர் நன்றி தெரிவித்தனர்.