கும்பகோணம், ஏப்.1- கும்பகோணத்தில் வரு வாய் கோட்டாட்சியர் தலை மையில் மார்ச் 17 அன்று மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற் றது. கூட்டத்தில் மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப் போர் சங்கம் சார்பில் கும்ப கோணம் அரசு மருத்துவ மனையில் மாற்றுத் திறனாளி களுக்கு என தனி மருந்து வழங்கும் இடமும், அதே போல் ஓபி சீட்டு வழங்கும் இடமும் உருவாக்கி தர வேண்டும், மாற்றுத்திற னாளிகள் சிகிச்சை பெறுவ தற்கு தனி வார்டு அமைக்க வேண்டும், தனி மருத்துவர் கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், கும்ப கோணம் தலைமை மருத்து வமனையில் மாற்றுத்திற னாளிகளுக்கு மருந்து வழங்கவும், ஓபி சீட்டு வழங்கவும் தனி கவுண்டர் திறக்கப்பட்டது. இதற்கு மாற்றுத்திற னாளிகள் சங்கம் மருத்து வத் துறைக்கு நன்றியை தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவத்துறை அதிகாரி களிடம் கூடுதலாக மாற்றுத் திறனாளிகளுக்கென தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்க விரைவில் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.