districts

img

பன்றி காய்ச்சலுக்கு தமிழ்நாட்டில் 380 பேர் பாதிப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தஞ்சாவூர், அக்.3 - தமிழ்நாட்டில் பன்றி காய்ச்சலால் 380  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவம்  மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் புதிய கட்டடங்கள், மருத்துவ உபகரணங்களை திங்கள்கிழமை தொ டங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் (எச்1என்1) பாதிக்கப்பட்டவர்களுக்கும், பருவநிலை மாற்றங்களால் ஏற்படுகிற காய்ச்ச லுக்கும் தீவிர சிகிச்சை என்ற வகையில் 11  நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் ஆயிரம் இடங் களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. இதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 நாள்களில் 1,488 காய்ச்சல் கண்டறியும் முகாம் கள் நடத்தப்பட்டன. மேலும், 915 பள்ளிகளில்  காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடை பெற்றன. இதுவரை 68,848 பேருக்கு காய்ச்சல் கண்டறியும் பணி நடைபெற்றது. மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 17  பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளார். மற்ற வர்கள் குணமடைந்து நலமுடன் இருக்கின் றனர். மாவட்டத்தில் உயிரிழப்பு பூஜ்ஜிய நிலையில் உள்ளது. தமிழகத்தில் 380 பேர் பன்றிக் காய்ச்ச லால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்றவர்கள் 17 பேர். மீதமுள்ளவர்கள்  வீடுகளிலும், தனியார் மருத்துவமனை களிலும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்கள் 3 - 4 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண் டால் போதுமானது. ஒரு குடும்பத்தில் யாருக் காவது காய்ச்சல் வந்தாலும், அவர்கள் முகக்கவசம் அணிவது அவசியம். பருவ நிலை மாற்றங்களால் ஏற்படும் காய்ச்சல் இருப்பதால், தமிழ்நாடு முழுவதும் இம்முகாம் களை நடத்துமாறு முதல்வர் அறிவுறுத் தியுள்ளார். இதன்படி, நாள்தோறும் 1,000 -  1500 முகாம்கள் கடந்த 11 நாள்களாக நடை பெறுகிறது. பள்ளிகளில் 12 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட  வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்திய தன்படி போடப்பட்டு வருகிறது. இதன்  விளைவாக தமிழகத்தில் 90 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள் ளது.  இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.