districts

img

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மருத்துவத் துறையில் 24 திட்டங்கள் அறிவிப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தஞ்சாவூர், அக்.5 - தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மருத்து வத் துறையில் 24 திட்டங்கள் அறி விக்கப்பட்டுள்ளன என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரி வித்தார்.  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற புதிய கட்டடங்கள், மருத்துவ உபகரணங்கள் உள்பட பல் வேறு நலத்திட்டங்களின் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியதா வது: “தமிழக முதல்வரின் ஆணைப்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கு ரூ.1.30  கோடி செலவில் மேமோகிராம் கருவி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் ஆண்டுக்கு 1,000 -  1,500 தாய்மார்களுக்கு தொடக்க நிலை யிலேயே மார்பகப் புற்றுநோயை கண்டறிந்து குணப்படுத்த முடியும். இதேபோல, ரூ.69 லட்சம் செலவில்  டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி அமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு 35,000 முதல் 50,000 பேர் பயனடைவர். தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் ரூ.1.10 கோடி மதிப்பில் ப்ளூரோஸ்கோப்பி வசதி கொண்ட டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி  அமைக்கப்பட்டு தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 5,000 - 6,000 பேர் பயன் பெறுவர். இதே மருத்து வமனையில் ரூ.14 லட்சம் செலவில் சிறுவர்களுக்கான ஒருங்கிணைப்பு பூங்கா திறக்கப்பட்டுள்ளது.  தமிழக முதல்வர் மானியக் கோரிக் கையின்போது வெளியிட்ட அறி விப்புகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.119.50 கோடி மதிப்பில், 24 திட்டங் கள் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்து வமனைகள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள், துணை சுகாதார நிலையங் கள் ஆகியவற்றில் பல்வேறு மருத்து வக் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப் படும்”. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.

இவ்விழாவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தயாரிக்கப்பட்ட 13  செயற்கை கால்களை 13 பேருக்கு அமைச்சர் வழங்கினார். சிறப்பாக மருத்துவப் பணி மேற்கொண்ட மருத்து வர்களைப் பாராட்டி பதக்கங்கள் வழங்கப்பட்டன. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநிலங் களவை உறுப்பினர் எஸ்.கல்யாண சுந்தரம், மயிலாடுதுறை தொகுதி  மக்களவை உறுப்பினர் செ.ராம லிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர் கள் துரை.சந்திரசேகரன் (திருவை யாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சா வூர்), கா.அண்ணாதுரை (பட்டுக் கோட்டை), மேயர்கள் சண்.ராமநாதன்  (தஞ்சாவூர்), க.சரவணன் (கும்ப கோணம்), மாவட்ட ஊராட்சி தலைவர்  உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர்  அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். முன்னதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) ச.மருது துரை வரவேற்றார். சுகாதாரப் பணிகள்  துணை இயக்குநர் எஸ்.நமச்சிவாயம் நன்றி கூறினார்.