தஞ்சாவூர், ஏப்.30 - தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் அப்பர் மடம், தேர் விபத்து தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன் மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஆய்வு மேற்கொண் டார். தஞ்சாவூர் அருகே களி மேடு கிராமத்தில், கடந்த ஏப்.27 அன்று நடைபெற்ற அப்பர் சதய விழாவை யொட்டி, வீதி உலாவில், தாழ்வாக சென்ற உயரழுத்த மின் கம்பியில், தேர் பட்ட தால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 17 பேர் படுகாய மடைந்து தஞ்சாவூர் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதைத்தொடர்ந்து, விபத்து குறித்து விசாரிக்க வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில், ஒரு நபர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவினர் சனிக்கிழமை (ஏப்.30) களிமேடு மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சை பெறு வோரிடமும் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை (மே 1) அன்றும் விசாரணை நடத்த உள்ளனர். அதன்படி முதற்கட்டமாக குமார் ஜெயந்த், சனிக் கிழமை தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் ரவளிப் பிரியா கந்தபுனேனி உள்ளிட்ட அதி காரிகளுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண் டார். பின்னர், களிமேடு கிரா மத்தில், விபத்து நடந்த இடத்தில் தேர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும் பொது மக்களி டம் விபத்து குறித்து கேட்ட றிந்தார். தொடர்ந்து குமார் ஜெயந்த் செய்தியாளர்களி டம் கூறுகையில், முதல் கட்டமாக விபத்து குறித்து ஒரு அறிக்கையும், வருங் காலங்களில் இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்தபிறகு அறிக்கை அளிக்கப்படும். அத்துடன், விபத்து குறித்து யாரேனும் தகவல் தெரிவிக்க விரும்பி னால், தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு அரசு மற்றும் பொதுமக்கள் சார்பில் தகவல் தெரிவிக்க லாம் என்றார்.