districts

img

காமாட்சிபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை  திட்டப்பணிகளை முதன்மை செயலாளர் ஆய்வு

 சின்னாளபட்டி, மார்ச் 4-  திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை முதன்மை செயலாளர் பெ.அமுதா  ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்ததோடு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். அதன்பின்னர் அருகில் உள்ள காமாட்சிபுரம் ஊராட்சிக்கு சென்று அங்குள்ள தொடக்கப்பள்ளி மற்றும்  நடுநிலைப்பள்ளிகளை பார்வையிட்ட அவர் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை பள்ளி ஆசிரியைகளிடம் கேட்டு,மாணவர்களின் கல்வித்திறனையும் கேட்டறிந்தார். அங்குள்ள கழிப்பறைக்கு சென்ற அவர் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கழிப்ப றைக்கு சாய்வுதளம் அமைக்காதது குறித்து விளக்கம் கேட்டதோடு உடனடியாக சாய்வுதளம் அமைக்க உத்தரவிட்டார். ஊரக வளர்ச்சித்துறையில் பொறியாளர் பிரிவில் ஓய்வுபெற்ற தற்காலிக பணியாளர்களை அழைத்து உங்களுக்கு சம்பளம் யார் தருகிறார்கள் என்றும் இந்த குறைந்த சம்பளத்திற்கு உங்களால் வேலை பார்க்க முடி யுமா என கேள்வி கேட்டதோடு இவர்களை அலுவலகத்தில் பணிபுரிய அனுமதித்தது யார் என கேள்வி கேட்டார். அப்போது மயானத்தின் முன்பக்கம் மற்றும் சுற்றுப்புறச் சுவர் கட்டுகிறீர்கள். மயானத்தின் எல்லை எவ்வளவு உள்ளது என கேள்வி கேட்டதோடு பவுன்டரி கல்லை காண்பிக்கச்சொல்லி கேட்டார். அதற்கு ஊராட்சிமன்ற தலைவர் கணேஷ் பிரபு மற்றும் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பதில் சொல்லாமல் தயங்கினார்கள்.  

கட்டசின்னாம்பட்டியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை  பார்வையிட்டு கட்டிடப்பணிகள் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது ஒப்பந்தகாரர் மாரியப்பன் தனக்கு பில் பாஸ் பண்ணவில்லை. அத னால்தான் பணிகள் தாமதமாகிறது என கூறியவுடன் உடனடியாக இன்று மாலைக்குள் அவருக்கு காசோலை வழங்க வேண்டுமென வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திருமலைசாமிக்கு உத்தரவிட்டார். அதன் பின்னர் எல்லைப்பட்டி காலனிப்பகுதிக்கு சென்ற அவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டப்பணிகளில் 30 சதவீதம் ஆதிதிரா விடர் காலனிப்பகுதிக்கு ஒதுக்கப்படாதது குறித்து விளக்கம் கேட்டதோடு ஒதுக்கப்பட்ட தொகையில் வடிகால் அமைத்துள்ளீர்கள். அந்த வடிகா லின் தண்ணீரும் அருகில் உள்ள ஓடைக்கு செல்லுமாறு அமைத்துள்  ளீர்கள் என கேள்வி கேட்டபோது அதற்கு பதில் அளித்த ஊராட்சிமன்ற தலைவர் கணேஷ்பிரபு ,தண்ணீரை சுத்தம் செய்து ஓடையில் விடு வதற்கான பணிகள் நடைபெற உள்ளது என்றார். பின்னர் எல்லைப் பட்டி காலனி மக்களிடம் நூறுநாள் வேலை திட்டப்பணிகள் முறையாக  ஒதுக்கப்படுகிறதா? என கேள்வி கேட்டதோடு ஓட்டு வீட்டில் வசிக்கும் உங்களுக்கு தேவைப்பட்டால் வீடுகளை மராமத்து செய்யவும் நிதி ஒதுக்கீடு செய்ய ஊராட்சிக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.