districts

கண்ணாரக்குடி சாதி ஆதிக்கத்தினரின் பிடியில் அரசு புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பை அகற்றி ஏழைகளுக்கு வழங்க சிபிஎம் வேண்டுகோள்

கும்பகோணம்,  பிப்.27 - தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் கண்ணாரக்குடி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட தாழ்த்தப் பட்ட விவசாயத் தொழிலாளர் கள் வாழ்ந்து வருகின்ற னர். இவர்களில் பெரும்பா லானோருக்கு வீடுகள் இல்லை. ஒரே வீட்டில் இரண்டு  பேர் மூன்று பேர் குழந்தை களுடன் வாழும் நிலை உள்ளது. இந்நிலையில் வட்டாட்சி யர் மற்றும் மாவட்ட ஆட்சிய ரிடம் தங்களுக்கு குடியிருக்க  வீடு, மனை வேண்டும் என  பலமுறை மனு அளித்து வந்த னர். ஆனால் இதுவரை குடி யிருக்க வீடோ, குடிமனையோ கிடைக்கவில்லை. இதனால் அரசுக்கு சொந்தமான புறம் போக்கு இடத்தை சுமார் 2  ஏக்கருக்கு மேல், அங்கு  வசிக்கும் சாதி ஆதிக்கத்தி னர் தங்கள் பிடியில் வைத் துள்ளனர்.  ஆனால் பிப்ரவரி 22 ஆம்  தேதி அப்பகுதி விவசாயத் தொழிலாளர்கள் சாதி  ஆதிக்கத்தினர் ஆக்கிரமித்தி ருந்த இடத்தில், ஆக்கிரமிப்பு களை அகற்றி விட்டு தாழ்த்தப் பட்ட விவசாயத் தொழிலா ளர்கள் தாங்கள் குடியிருக்க குடிசைகளை போட முயற்சித் தனர். அப்போது, சாதி ஆதிக்க வகுப்பினர், போடப் பட்டிருந்த குடிசைகளை அகற்றி தகராறில் ஈடுபட்ட னர். இதனால் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி விவசாய தொழிலாளர்கள் வீடு, குடி மனை கேட்டு சாலை மறிய லில் ஈடுபட்டதால், திருவிடை மருதூர் வட்டாட்சியர் தலை யிட்டு இரண்டு நாட்களில் சுமூக தீர்வு கிடைக்கும் என உறுதியளித்தார். இந்நிலையில் மேற்படி  வட்டாட்சியர் கொடுத்த வாக்குறுதியை நிறைவே றாமல் இருந்ததால் அரசு புறம்போக்கு நிலத்தில், தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் மீண்டும் குடிசை போட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலை நிலவி வருகிறது. எனவே இது சம்பந்த மாக வட்டாட்சியர், மாவட்ட  ஆட்சியர் மற்றும் தமிழக  அரசு சாதி ஆதிக்கத்தினரிட மிருந்து அந்த பகுதியிலுள்ள அரசுக்கு சொந்தமான புறம் போக்கு இடத்தை கைப்பற்றி,  வீடு இல்லாத அப்பகுதி மக்க ளுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பனந்தாள் ஒன்றியக் குழு கேட்டுக் கொள்கிறது.