புதுதில்லி:
கொரோனா வைரஸ் நெருக்கடியுள்ள இந்தக் காலத்தில் ஏழைகளுக்கு நிவாரணமாக வழங்குவதற்கு போதுமான பருப்பு வகைகள் மத்திய அரசிடம்உள்ளன. ஆனால், விநியோகிப்பதற்கு மாநில அரசுகள் போதுமான “அக்கறைகாட்டவில்லை” என மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கான பருப்பு வகைகள் ஏற்கனவே பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. ஆனால் அவை பொது விநியோக முறையின் (பி.டி.எஸ்) கீழ் ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு (53,617 டன்) மட்டுமே விநியோகிக்க முடிந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் ஏழைகளின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரதான் மந்திரி கரீப் அன்ன யோஜனா (பி.எம்.ஜி.ஏ.ஐ)வின் கீழ் ஒவ்வொரு குடும்ப அட்டை தாரருக்கும் ஜூன் வரை மூன்றுமாதங்களுக்கு இலவசமாக ஒரு கிலோ பருப்பு வகைகளை விநியோகிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பருப்பு வகைகளை விநியோகிப்பது மாநில அரசாங்கங்களின் பொறுப்பாகும். இந்தக் நெருக்கடியான காலத்தில் பருப்பு வகைகளை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கொண்டு செல்வது எங்களுக்கு எளிதானது அல்ல. அந்தப் பணியை குறைந்தபட்சம் மாநிலங்கள் உறுதிப்படுத்தவேண்டும். பிஎம்ஜிஏஒய் இன் கீழ் பருப்பு வகைகளின் மாத ஒதுக்கீடு 1.95 லட்சம்டன். இதுவரை 1.81 லட்சம் டன் பருப்புவகைகள் மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள் ளன. அவற்றில் 53,617 டன் மட்டுமேபயனாளிகளுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளன என்றார்.
மேலும் அவர் கூறுகையில், மத்திய அரசிடம் போதுமான பருப்பு வகைகள் உள்ளன. நாங்கள் அரைத்து அதை மாநிலங்களுக்கு வழங்குகிறோம். பருப்பு வகைகளை மூன்று மாதங்களாவது விநியோகிக்கும் பொறுப்பை மாநிலங்களால் ஏற்கமுடியவில்லை? மாநிலங்களில் விநியோகிக்கும் பொறுப்பை மத்திய அரசு கவனித்துக்கொள்ளும் என்று அவர்கள் எதிர்பார்க்கமுடியாது. இதுகுறித்து நான் முதலமைச்சர் களுடன் தனிப்பட்ட முறையில் பேசினேன், அவர்களுக்கு விளக்கமளித் தேன். இதுவரை அனுப்பப்பட்டதை மாநிலங்கள் விநியோகிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மாநிலங்களும் இதில் கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டும் என்றார்.தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ்க்கும் இந்த விஷயம் தெரியாமலா இருக்கும்?மத்திய அரசு இதுவரை தமிழக அரசுக்கு எவ்வளவு கொடுத்துள்ளது. எவ்வளவு விநியோகிக்கப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசு வெளியிடுமா?