சிவகங்கை, பிப்.14- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 61 நெல் கொள்முதல் மையங்களில் 10 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய் யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் மையங்க ளில் விவசாயிகளிடம் பணம் வசூல் செய்ப வர்கள் மீது காவல்துறை மூலமாக குற்ற வியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மது சூதன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் மேலும் தெரி விக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 61 நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 10,500 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நேரடி கொள்முதல் மையங்களை கண்காணிப்ப தற்கு துணை ஆட்சியர் தலைமையில் தாலுகா வாரியாக மேற்பார்வை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கள ஆய்வு மேற் கொண்டு வருகிறார்கள். கொள்முதல் நிலை யங்களில் விவசாயிகளிடமிருந்து அரசு விதி முறைக்கு புறம்பாக முறைகேடாக பணம் வசூல் செய்பவர்கள் மீது காவல்துறை மூல மாக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.