districts

விருதுபெற்ற  நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு பாராட்டு  

  சிவகங்கை, ஜன.16-  வீதி விருது விழாவில் விருதுகள் பெற்ற சிவகங்கை மாவட்டத்தின் 150  நாட்டுப்புற கலைஞர்களுக்கு பாராட்டு விழா சிவகங்கை லிட்டில் பிளவர் பள்ளியில் நடை பெற்றது.  சென்னை லயோலா கல்லூரியில் வீதி விருது விழா   ஜனவரி 3, 4 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இவ்விழா வில் விருது பெற்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சோழ புரம் போஸ்,மானாமதுரை கலைக் கூத்தாடி சுந்தரம், செம்பூர் இருளாண்டி, துத்திக்குளம் பாண்டி உள்ளிட்ட ஏழு நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா ரூ.10 ஆயி ரத்துடன் விருதுகள் வீதி விருது விழாவில் வழங்கப் பட்டது.       விருதுகள் பெற்ற நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு பாராட்டுக்கூட்டமும், 150 நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சியும் சிவகங்கை லிட்டில் பிளவர் பள்ளியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம், சிவகங்கை மாவட்ட அனைத்துக்  கலைஞர்கள் கூட்டமைப்பும் சார்பில் நடைபெற்றது.  சங்கத்தின் மாவட்ட தலைவர் பேராசிரியர் முனை வர் தங்க.முனியாண்டி, லிட்டில் பிளவர் பள்ளி நிர்வாகி ஜெயக்குமார்,   மாவட்டக்குழு உறுப்பினர் சிவனேஷ் ,   கலைஞர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாரதி  சண்முகம், கலைநன்மணி  கொம்பு வேலு, கிளைபொரு ளாளர் மாணிக்கவள்ளி  உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். வீதி விருது விழாவிற்கு 150 கலைஞர்கள் சென்று  திரும்ப வாகன வசதி செய்து கொடுத்த  சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி தாளாளர் டாக்டர் சேது குமணன்,  சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் உள் ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.