சிவகங்கை, ஜூன் 15- சிவகங்கை மாவட்டம் காளை யார் கோவிலில் உள்ள காளீஸ்வரா ஆலையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து தொழிற்சங் கங்களைக் சேர்ந்த தொழிலாளர் கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி னர். தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான காளையார்கோவில் காளீஸ்வரா மில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. இந்த ஆலையில் நிரந்தர தொழிலா ளர்களாக ஆண்கள் 259 தொழிலா ளர்களும், பெண் தொழிலாளர்கள் 45 பேரும், தினக்கூலி தொழிலா ளர்கள் 175 தொழிலாளர்களும் ,225 பெண் தொழிலாளர்களும் மொத்த மாக 700 தொழிலாளர்கள் மூன்று ஷிப்ட்டாக வேலை செய்து வரு கின்றனர். கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டதால் மார்ச் 23 முதல் மே 17ஆம் தேதி வரை இரண்டு மாதங் கள் தொழிலாளர்களுக்கு நிர்வாகம் முழு சம்பளம் வழங்கியது. 2020 மே 18 முதல் டிசம்பர் 26 வரை தொழிலா ளர்களுக்கு பாதி சம்பளம் வழங்கி யது. மீண்டும் 2020 டிசம்பர் 27 முதல் 2020 வரை 50 சதமானம் தொழிலா ளர்களைக் கொண்டு ஆலை இயக்கப்பட்டது .2021 மே 10 முதல் ஜூலை 1 வரை முழு ஊரடங்கு செய் யப்பட்டதால், ஜூலை 31 முதல் மூலப் பொருள் பற்றாக்குறை காரணமாக ஆலை நிறுத்தப்பட்டு இன்றுவரை ஓடவில்லை. இந்த ஆலையில் ஊர டங்கு வரைக்கும் உற்பத்தியான அனைத்து நூல்களும் விற்பனை யாகி அதன் லாபம் சுமார் ஒரு கோடிக்கும் மேல் கிடைத்துள்ளது. மூடிக்கிடக்கும் ஆலையால் அனைத்து தொழிலாளர்களும் தங்க ளது வாழ்வாதாரத்தை இழந்து கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த மாவட்டத்திலேயே பொதுத் துறை நிறுவனமாக இயங்கி வந்த இந்த நூற்பாலை தற்போது மூடப் பட்டுள்ளது. ஆகவே இந்த ஆலை யை திறக்க வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் மில் முன்பு உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட்டனர்.