சீர்காழி: கொள்ளிடத்தை தலைமையாகக் கொண்டு தனி தாலுகா விரைவில் அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் கே.கேசவன் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு மேலாகிறது. தலைநகரில் உள்ள அந்தஸ்தை பெற்று அனைத்து தரப்பு அதிகாரிகளும் மயிலாடுதுறையில் நியமிக்கப் பட்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கொள்ளி டத்தை தலைமை இடமாகக் கொண்டு தாலுகா உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் கொள்ளிடம் பகுதிக்கு பலமுறை வந்து தாலுகா அலுவலகம் கட்டும் இடத்தை ஆய்வு செய்து தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக தற்காலிக இடமும் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அது அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தனி தாலுகா அமைக்கப் பட்டால் தாலுக்கா அளவில் உள்ள வணிகர்கள், விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் எளிதில் சென்று பயன டைய வாய்ப்பாக இருக்கும். சீர்காழியில் ஆர்டிஓ அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்குரிய அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர். ஒரு கோட்டத்துக்குரிய அந்தஸ்து சீர்காழிக்கு கிடைத்துள்ளது. ஆனால் கொள்ளிடத்தை தலைமையாகக் கொண்ட தனி தாலுகா என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. எனவே, கொள்ளிடத்தை தலைமையிடமாகக் கொண்ட தாலுகாவாக முன்னதாகவே முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் உடனடியாக அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.