சீர்காழி, பிப்.25 - மயிலாடுதுறை மாவட் டம் சீர்காழி அருகே பழை யாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்தத் துறைமுகத் தின் மூலம் தினந்தோறும் 350 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுப்படகுகள் மூலம் 5000 மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வரு கின்றனர். இந்த துறைமுகத்தின் மூலம் ஒரு நாளைக்கு ரூ. 100 கோடிக்கு குறையாமல் வருவாய் ஏற்பட்டு வரு கிறது. இங்குள்ள விசைப்பட குகள் படகு அணையும் தளத் தில் நிறுத்தப்பட்டு வரு கின்றன. கடந்த பருவமழையின் போது மேட்டூர் அணையி லிருந்து அதிக அளவில் வெளியேற்றப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு துறைமுகம் அருகே கடலில் கலக்கும்போது இங்குள்ள படகு அணையும் தளத்தில் சுமார் 400 மீட்டர் தூரத்துக்கு மண் மேடாகி படகுகள் குறிப்பிட்ட தூரத்துக்கு நிறுத்த முடியாமல் அருகி லுள்ள பக்கிம்காம் கால்வா யில் நிறுத்தப்பட்டு வரு கின்றன. இந்த துறை முகத்தில் அனைத்து விசைப் படகுகளையும் நிறுத்துவ தற்கு ஏதுவாக படகு அணை யும் தளத்தை ஒட்டியுள்ள மணல்மேட்டை அகற்றி விட்டு ஆழப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று விசைப்படகு உரிமையா ளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.