இளம்பிள்ளை, டிச.6 - சேலம் மாவட்டம், இளம் பிள்ளை அருகே உள்ள தப்பகுட்டை கிராமத்தில் உள்ள அத்தனூர் பகுதி யைச் சேர்ந்தவர் கராத்தே பயிற்ச்சியாளர் நடராஜ் (40). இவர் பல்வேறு வகை யில் கின்னஸ் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளார்.
இந் நிலையில், இளம்பிள்ளை அருகே உள்ள பாரம்பரிய கலைகளின் பயிற்சி மையத் தில், யோகா கலையில் உள்ள பிராணாயாமம் பயிற்சி மூலமாக 19 நிமி டத்தில் 100 பலூன்களை மூக்கின் நாசித்துளை வாயி லாக ஊதி கராத்தே நடராஜ் சாதனை படைத்தார். இந்த நிகழ்ச்சியில், மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட அப்பகுதிப் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.