districts

மேட்டூர் அணை: நீர்வரத்து குறைந்தது

சேலம், செப். 18 - மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, புதன்கிழமையன்று விநாடிக்கு 12 ஆயிரத்து 083 கன அடியிலிருந்து 4397 கன அடி யாக குறைந்துள்ளது. அதேநேரம், மேட்டூர் அணையி லிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 23 ஆயிரம் கன அடி விகிதமும், கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி விகிதமும் தண்ணீர்  திறக்கப்பட்டு வருவதால், அணையின் நீர்மட்டம் 110.05 அடியிலிருந்து 108.85 அடியாக சரிந்துள்ளது. தற்போது அணையின் நீர் இருப்பு 76.78 டிஎம்சியாக உள்ளது.