சேலம்,ஜன.31- தில்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரி வித்து சேலத்தில் நடக்க இருந்த உண்ணா விரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப் பட்டதைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
தில்லியில் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய அமித்ஷாவின் காவல் துறையைக் கண்டித்து மகாத்மா காந்தி நினைவு நாளில் நாடு முழுவதும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கி ணைப்புக்குழு சார்பில் உண்ணாவிரதம் நடத்திட அறைகூவல் விடப்பட்டது.
அதன் படி, சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள விவசாயிகள் கூடினர். ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தனர். இதனால் ஆவேமடைந்த விவசாயிகள் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன் கண்டன உரையாற்றினார். இதில், தவிச மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் பி.தங்க வேலு, பி.அரியாக்கவுண்டர், சிபிஐ(எம்எல்) அயந்துரை, எஸ்யூசிஐ நடராஜ் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.