districts

img

போதைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி மாதர், வாலிபர் சங்கத்தினர் உறுதிமொழியேற்பு

சேலம், டிச.31- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகி யவை சார்பில் போதைக்கு எதிராக விழிப்பு ணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு  நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் நாளுக்கு நாள் இளைஞர் கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரு கின்றனர். மேலும், புத்தாண்டு கொண்டாட் டத்தின் பெயரில், இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்று விபத் துக்குள்ளாகின்றனர். இதனை தடுப்பதற்கு மாதர், வாலிபர் சங்கத்தினர் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதியேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி புற வழிச்சாலையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு வாலிபர் சங்க கிழக்கு மாநகர தலைவர்  எஸ்.கோபிராஜ்  தலைமை வகித்தார். இந்த  விழிப்புணர்வு பேரணியை அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் அகில  இந்திய செயலாளர் பொன்.ரமணி, அனைத் திந்திய ஜனநாயக மாத சங்கத்தின் மாநி லக்குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி ஆகி யோர் துவக்கி வைத்தனர். சீலநாயக்கன் பட்டி பகுதியில் இருந்து தாதகாப்பட்டி, பிர பாத் வழியாக பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் விழிப்புணர்வு பேரணி  நிறைவு பெற்றது. அதனைத்தொடர்ந்து காந்தி சிலை முன்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் மாதர் சங்க கிழக்கு மாநகர தலைவர் ஆர்.கவிதா, வாலிபர் சங்க மாவட்ட  தலைவர் பி.ஜெகநாதன், மாவட்ட செய லாளர் வி.பெரியசாமி, மாதர் சங்க மாவட்ட  தலைவர் ஆர்.வைரமணி, மாவட்ட செய லாளர் எஸ்.எம்.தேவி ஆகியோர் கலந்து கொண்டனர். கிழக்கு மாநகர துணைத் தலைவர் டி.சாவித்திரி நன்றி கூறினார்.