சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்துள்ள கொளத்துரில் மாங் காடு மாடர்ன் பள்ளியில், விலையில்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்வு வெள்ளியன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு வழங்கினர். இந்நிகழ்வில், மாவட்ட கல்வி அலுவலர் பி.ராம கிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கொளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.