districts

சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

சேலம், டிச.7- சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் மாவட்டம், பொன்னம்மாப்பேட்டை வாய்க்கால் பட்டறை அருகே வால்காடு பகுதியைச் சேர்ந்தவர் முரு கன். இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனை வியும், 3 மகன்களும் உள்ளனர். இதில், மூத்த மகன் மதன் குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்று நோயால் உயிரி ழந்த சம்பவம், குடும்பத்தார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், ஞாயிறன்று இரவு முருகன், கோகிலா மற்றும் இரு மகன்களான வசந்தகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு விஷம் கொடுத்து தாங்களும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திங்களன்று வெகு நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நான்கு பேரும் இறந்த நிலையில் இருந்தனர். இதனையடுத்து நான்கு பேரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரி சோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.