districts

img

வட்டார கல்வி அலுவலரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

ராணிப்பேட்டை, டிச.23 - ஆசிரியர் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் சோளிங்கர் வட்டார கல்வி அலுவலர் கே.வி.பாபுவை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் மாவட்டத் தலைவர் இரா.சிவராஜ் தலைமையில் முதன்மைக் கல்வி  அலுவலர் அலுவலகம் அருகே வியாழ னன்று (டிச. 22) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டார கல்வி அலுவலர் கே.வி.பாபு ஆசிரி யர்களை தொடர்ந்து பழிவாங்கி வருகிறார். பள்ளிகளை பார்வையிடும் போது, பெண்கள் தலைமை ஆசிரியர்களாக உள்ள  பள்ளிகளுக்கு சென்று பாடம் எடுக்க சொல்லி தனது செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார்.  ஆசிரியர்களிடம் பணம் வசூல் செய்ய அலுவலக ஊழியர்களை தூண்டிவிடுவது, பள்ளி துப்புரவு பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க மறுப்பது போன்ற ஆசிரியர்,ஊழியர் விரோத போகை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை, மாநில செயற்குழு உறுப்பினர் பா.குண சேகரன். மாவட்டப் பொருளாளர் வே.தன லட்சுமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.