ராணிப்பேட்டை, அக். 1- ஆற்காடு அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து பலியான கணவன்-மனைவின் வாரிசுகளுக்கு ரூ.20 லட்சம் அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா பெரிய குக்குண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சரவணன் (50). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு (25), தேவி (21) என்ற மகள்களும், பிரகாஷ் (23) என்ற மகனும் உள்ள னர். இவர்களுக்கு சொந்தமாக விவ சாய நிலம் வீட்டின் அருகே உள்ளது. சனிக்கிழமை (அக்.1) காலை 7 மணிக்கு விவசாய நிலத்திற்கு சென்ற சரவணன், வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவரது அலறல் சத்தம் கேட்டு நிலத்திற்கு ஓடி வந்த அவரது மனைவி சாந்தி கணவரை தூக்க முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மின்சாரத் துறையில் போதிய பராமரிப்பு, கண்காணிப்பு பணிகள் முறையாக நடைபெறுவதில்லை என்றும் மின்சாரத் துறையின் அலட்சியமே இதுபோன்ற உயிரி ழப்புகள் நடைபெறுவதற்கு கார ணம் என குற்றம் சாட்டியுள்ள தமிழ்நாடு விவசாயிகள், உயிரிழந்த வர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் வீதம் 20 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மாவட்டத் தலைவர் எஸ்.கிட்டு, மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.