districts

img

விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கவேண்டும் வி.தொ.ச ராணிப்பேட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

ராணிப்பேட்டை, டிச.25 - விவசாய தொழிலாளர்க ளுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என  அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத் தின் ராணிப்பேட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி யுள்ளது. சங்கத்தின் 2ஆவது மாநாடு திமிரியில் மாவட்ட தலைவர் டி.சந்திரன் தலை மையில் சனிக்கிழமை (டிச.24) நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலை வர் ஆர்.வெங்கடேசன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். மாநில துணைத் தலைவர் பி.சுப்பிரமணி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செய லாளர் பி.ரகுபதி வேலை அறிக்கையையும், பொரு ளாளர் எஸ்.வெங்கடே சன் வரவு, செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் சேகர் வாழ்த்திப் பேசி னார். மாநிலச் செயலாளர் எம்.முத்து மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
தீர்மானங்கள்
விவசாயத் தொழிலா ளர்களுக்கு சட்டப்படியான கூலி வழங்க வேண்டும்,  விவசாயத் தொழிலாளர்க ளுக்கு தனி நல வாரியம்  அமைக்க வேண்டும், ஓய்வூதிய திட்டம், அனைத்து பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 100 நாள் அட்டை உள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாவட்ட தலைவராக டி.சந்திரன், செயலாளராக பி.ரகுபதி, பொருளாளராக எஸ்.வெங்டேசன் உள்ளிட்ட 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.