இராமேஸ்வரம், ஆக. 3 - எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ஜூலை 31 அன்று நெடுந்தீவு கடற்ப குதியில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது விசைப்படகு மீது, இலங்கை கடற்படையினர் தங்களின் ரோந்துப் படகை மோதினர். இதில், இராமேஸ்வரம் மீனவர்களின் படகு கட லில் மூழ்கியது. அந்த விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மூக்கையா, முத்து முனியாண்டி, மலைச்சாமி, ராமச்சந்திரன் உள்ளிட்ட நால்வரும் உயிர் பயத்தில் கடலில் குதித்தனர்.
இதில் மூவர் மீட்கப்பட்டு யாழ்ப்பா ணம் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ப்பட்ட நிலையில், மலைச்சாமி என்பவர் உயிரிழந்தார். மேலும் ஒரு மீனவரான ராமச் சந்திரனை தேடும் பணியில் இலங்கை கடற்படை அதிகாரிகள் தற்போது வரை ஈடு பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலை யில் உயிரிழந்த மலைச்சாமியின் உடல், உடற்கூறு ஆய்வுக்குப் பின் காங்கேசன் கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டது. அவர்கள், மீனவர் மலைச்சாமியின் உடல் மற்றும் அவருடன் மீன்பிடிக்க சென்ற முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோரை சரியாக சனிக்கிழமை அதி காலை சுமார் இரண்டு மணி அளவில் ஐ.எம்.பி.எல் எல்லையில் இருந்த இந்திய கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைத் தனர். அதனைத் தொடர்ந்து காலை நான்கு மணி அளவில் இராமேஸ்வரம் மீன் பிடித் துறைமுகத்திற்கு இறந்த மீனவரின் உடல் கொண்டுவரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.