districts

img

அய்யனாபுரத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை சிபிஎம் - கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

இராஜபாளையம், பிப்.15-  விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யம் அருகே மேலராஜ குலராமன் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனாபுரம் கிராமத்தின் வடக்கு பகுதியில் 300- க்கும்  மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த  வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழை நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் பணி கள் பாதியில் நிறுத்தப்பட்டன. ஏற்கெ னவே இருந்த ஓடை ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் மாதக் கணக்கில் கழிவுகள் தேங்கி சுகா தார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. கழிவுகள் தேங்கி உள்ளதால் அப் பகுதி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறி விட்டது என்றும் கழிவு  நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார  சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்று மக்கள் தெரிவித்தனர். மேலும் பல்வேறு தெருக்களில் சாலை வசதி செய்து தரப்படவில்லை. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக காணப்படுவதால் நடந்து செல்லக் கூட  முடியாத நிலை உள்ளது. மேலும் பல்வேறு தெருக்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாரக்சிஸ்ட் கட்சியின் தலைமையில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர் கிராமமக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றக்கோரி புதன்  கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேலராஜ குலராமன் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அய்யனாபுரம் கிராம மக்கள் காத்தி ருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இடத்தை விட்டு அகல மாட்டோம் என அறிவித்துள்ள பொது மக்கள், அலுவலகத்தின் முன்பாக சமையல் செய்து காத்திருக்கும் போராட் டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு சிபிஎம் ஒன்றி யக்குழு உறுப்பினர் சஞ்சீவிநாச்சியார் தலைமை தாங்கினார்.  மாநிலக்குழு உறுப்பினர் மகாலட்சுமி கோரிக்கை களை விளக்கி பேசினார். ஒன்றிய செய லாளர் முனியாண்டி கமிட்டி உறுப்பினர் சோமசுந்தரம், ஆறுமுகம், எம்.கே. பழ னிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.