இராஜபாளையம், நவ.26- இராஜபாளையம் நகராட்சி 42 வது வார்டு திருவள்ளுவர் நகர் நெசவாளர் காலனி ஆதிதிராவிடர் மக்கள் சுடுகாட்டு பாதை இல்லாமல் நாற்பது ஆண்டு காலமாக சிரமப்பட்டு வந்தனர். சுடுகாட்டு பாதைக்காக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சீனி வாசராவ் நினைவு தினத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து இராஜபாளையம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக 15 நாட்களில் சுடு காட்டு பாதை அமைத்து தருவதாக ஒப்பந்தம் அளித்தனர். தொடர்ந்து அதி காரிகளை சந்தித்து வற்புறுத்தியதில் அப்பகுதியில் சுடுகாட்டுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிட மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன் னணி போராட்டத்தால் நிறைவேறி யுள்ளது. இப்பாதை அமைய காரணமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊர் தலை வர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். ஊர் பெரியோர்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும், தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும் நன்றி தெரிவித்து பேசினர்.
நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் அர்ஜுனன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா ளர் முருகன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் மாரியப்பன், நகரச் செயலா ளர் சுப்பிரமணியன், நகர குழு உறுப்பி னர் மைதிலி, கிளைச் செயலாளர் பொன்னுச்சாமி, மூத்த தோழர்கள் அய்யாசாமி, சின்னச்சாமி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தலைவர்கள் சுடுகாட்டுக்கு தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மண் சாலையை, தார் சாலையாக அமைத்திட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண் டாமை ஒழிப்பு முன்னணியும் தொடர்ந்து உங்களோடு இணைந்து முன்னெடுப் போம் என உறுதி கூறினர்.