புதுக்கோட்டை, மே 6 - புதுக்கோட்டை அருகே 20 ஆண்டு களுக்குப் பிறகு நடைபெறும் தேசிய அளவி லான சதுரங்கப் போட்டியில் பல்வேறு மாநிலங் களிலிருந்து 280 வீரர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். புதுக்கோட்டை அருகே பெருமாநாடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டி 20 ஆண்டு களுக்குப் பிறகு வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. சாய் சரவணா அகா டமி சார்பில் நடைபெறும் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டி நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட மாநிலங் களைச் சேர்ந்த 280 வீரர்கள் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். குறிப்பாக இந்த போட்டியில் அமெரிக்க வீரர் வெள்ளி திருமுதிரன் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். ஓபன் முறைப்படி நடைபெறும் இந்த போட்டியில், 3 வயது முதல் 90 வயது வரை உள்ள வீரர்கள் பங்கேற் றுள்ளனர். போட்டியில் வெற்றிபெறும் சுமார் 100 பேருக்கு ரூ.3 லட்சம் வரை ரொக்கப் பணமும் கேடயங்களும் பரிசாக வழங்கப்பட உள்ளன.