அரியலூர், மார்ச் 24 - அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் தேசிய அளவிலான நெட்பால் போட்டி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் நான்கு நாட்கள் நடைபெற் றது. இதில் இந்தியாவின் 21 மாநிலங்களில் இருந்து, 72 பல்கலைக்கழகங்களின் வீரர்கள் பங்குபெற்றனர். இதில் முதல் பரிசை பாரதிதாசன் பல்கலைக்கழகம் தட்டிச் சென்றது. இரண்டாம் பரிசு கோழிக்கோடு பல்கலைக்கழகம், மூன்றாம் பரிசு கேரளப் பல்கலைக் கழகம், நான்காம் பரிசு தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வீரர்கள் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பாரதிதாசன் பல்கலைக் கழக துணைவேந்தர் செல்வம் பரிசுகள் வழங்கி பாராட் டினார். இதில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் விளையாடிய மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறி வியல் கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கும் ஒரு ஆண்டு கட்டண சலுகையும், தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை யும், வெற்றி பெற்ற தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளை யாட்டு பல்கலைக்கழகம் சார்பில் விளையாடிய மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கும், ஒரு பருவ கட்டண சலுகையும், தலா ரூ.5,000 ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என கல்லூரியின் தாளாளர் எம்.ஆர்.இரகுநாதன் அறிவித்தார்.