districts

img

தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் போட்டி கர்நாடகா, இராஜஸ்தான் அணிகள் சாம்பியன்

பெரம்பலூர், ஏப்.9- தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலி பால் போட்டி பெரம்பலூரில் நடைபெற்றது. இதில், கர்நாடகா, இராஜஸ்தான் அணிகள் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றன.  பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் தேசிய பாரா ஒலிம்பிக் வாலிபால் கூட்ட மைப்பு, மாநில பாரா வாலிபால் சங்கம், மாவட்ட வாலிபால் சங்கம், ஈரோடு உணர்வு கள் டிரஸ்ட  ஆகியவை சார்பில் தேசிய அள விலான பாரா ஒலிம்பிக் உட்கார்ந்து விளை யாடும் வாலிபால் சாம்பியன்ஷிப்-2023 போட்டிகள் சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யா லயா பப்ளிக் பள்ளியில் கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது. ஆல்மைட்டி பள்ளி தாளாளர் டாக்டர்  ஆ.ராம்குமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்விற்கு தேசிய பாரா ஒலிம்பிக் வாலி பால் கூட்டமைப்பின் தலைவர் சந்திரசேகர், மாநிலதலைவர் மக்கள்ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். முதல் நாள் போட்டியை  மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கயற் கண்ணி தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, ஜார்கண்ட், ராஜஸ்தான், கர்நாடகா, அரியானா, இமாச்சல பிரதேசம், தெலுங்கானா ஆகிய  எட்டு மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திற னாளி வீரர்கள் கலந்து கொண்டனர். சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆண் களுக்கான இறுதிப்போட்டியில் கர்நாடகா மற்றும் இராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் கர்நாடகா அணி வெற்றி பெற்று சாம்பி யன் பட்டத்தை தட்டிச் சென்றது.  பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் மாநில அணிகள் மோதின. இதில் இராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.  வெற்றி பெற்ற அணிகளுக்கு தேசிய பாரா ஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பின் தலைவர் சந்திரசேகர், மாநிலத் தலைவர் ராஜன், போட்டி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் ராம்குமார் ஆகியோர் பரிசுக்கோப் பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.  பாராட்டு சான்றிதழ், கேடயம் ஐஓபி பெரம்பலூர் கிளை,  அஸ்வின்ஸ் குழுமம், அகரம்சிகூர் வெற்றி உயர்நிலைப்பள்ளி, சிங்கை டெக்ஸ்டைல்ஸ் பேலஸ் பிரைவேட் லிமிடெட் பெரம்பலூர், ஆதவ் பப்ளிக் ஸ்கூல்,  அற்புதா மருத்துவமணை, லிட்டில் சூப்பர் ஸ்டார் அகாடமிக் ஆகிய நிறுவனங்கள் உதவியுடன் வழங்கப்பட்டது/ போட்டிகான ஏற்பாடுகளை ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி செய்திருந்தது.