புதுக்கோட்டை, ஜூலை 10 - கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத் தின் கீழ் சுந்தம்பட்டி ஊராட்சி பெருச்சி வன்னியம் பட்டியில் 17 ஏக்கரில் 23 விவசாயி கள் பயன்பெறும் வகையில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை தொடங்கி வைத்தார். மேலும், வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பி னர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, துவார் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சம் மதிப்பீட் டில் நிழற்குடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.