districts

img

சிற்றுண்டிகள் வழங்கும் திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுக்கக் கூடாது! சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஆக.10 - தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை வேளையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அம்மா உணவகங்களுக்கு கொடுப்பதை எதிர்த்து சத்துணவு ஊழியர்கள் புதன் கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை வட்டத் தலை வர் த.ராஜகோபாலன் தலைமை வகித்தார்.  கோரிக்கைகளை விளக்கி வட்டச் செயலா ளர் கு.ராஜமாணிக்கம் பேசினார். போராட் டத்தை ஆதரித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் பால்பிரான்சிஸ், அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் வள்ளியப்பன் உள்ளிட் டோர் பேசினர். சங்கத்தின் முன்னாள் மாநிலச்  செயலாளர் கு.சத்தி நிறைவுரையாற்றினார். தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை வேளையில் சிற்றுண்டிகள் வழங்கும் திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கோ, அம்மா உணவகங்களுக்கோ கொடுக்கக் கூடாது. அதே பள்ளியில் உள்ள சத்துணவு  மையங்கள் மூலமாக வழங்க வேண்டும்.  சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப் பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன. ஆர்ப்பாட்ட முடிவில் கோரிக்கை மனுவை புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி  அலுவலரிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.