districts

img

நூறு நாள் வேலையை 150 நாளாக உயர்த்துக! விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 29 - மகாத்மா காந்தி தேசிய வேலை  உறுதித் திட்டத்தில் வருடத்திற்கு நூறு நாள் வேலை என்பதை 150  நாளாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில்  அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அன்னவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விதொச ஒன்றி யச் செயலாளர் எம்.ஜோஷி தலைமை வகித்தார். தலைவர் எஸ். ஆறுமுகம், பொருளாளர் சி.சக்தி வேல் ஆகியோர் முன்னிலை வகித்த னர். கோரிக்கைகளை விளக்கி சங்கத் தின் மாநிலக் குழு உறுப்பினர் கே.சண் முகம், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா மற்றும் நிர்வாகிகள் பேசினர். கறம்பக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விதொச தெற்கு  ஒன்றியச் செயலாளர் ஆர்.சக்தி வேல் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றியத் தலைவர் என்.இளவரசு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.பொன்னுச்சாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் த. அன்பழகன், ஒன்றியச் ஒன்றியச் செய லாளர் பி.வீரமுத்து உள்ளிட்டோர் பேசினர். குன்றாண்டார்கோவிலில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விதொச  ஒன்றியத் தலைவர் வி.பழனிச்சாமி தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மாவட்டத் தலைவர் எம்.சண்முகம், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே.தங்கவேல், ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச் செல்வன் மற்றும் நிர்வாகிகள் பேசினர்.

திருவாரூர்
திருவாரூர் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் வி.ராஜாங்கம், நகர  செயலாளர் ஏ.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஆர்.குமாரராஜா கோரிக்கை களை விளக்கிப் பேசினார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு விவசாய தொழிலாளர் சங்க  ஒன்றிய தலைவர் ரமேஷ் தலைமை  வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இளங் கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், மகா ராஜன், வெங்கடாசலம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாதர் சங்க  மாவட்டச் செயலாளர் பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.